உணவு மற்றும் பான சேவை

விருந்தோம்பல் துறையில், உணவு மற்றும் பான சேவைத் திணைக்களம் மிக உயர்ந்ததாகவுள்ளது. முன் அலுவலக பணியாளர்கள் நீங்கள் சந்தித்த மிகச் சிறந்தவர்களாகவும், சொத்தானது மிக அழகாகவும் இருக்க முடியும். ஆனால், உணவு மற்றும் பான சேவையானது சிறந்த தரத்தில் இல்லாவிட்டால், ஹோட்டலுக்கு விருந்தினர்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.

எஃப் என்ட் பி (F&B) என பொதுவாக குறிப்பிடப்படும் உணவு மற்றும் பான சேவைத் திணைக்களமானது விருந்தோம்பல் துறையின் மிகப்பெரிய கூறாக இருப்பதுடன் நிறுவனத்தின் இலாபத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஹோட்டலில் வசூலிக்கப்பட்ட மொத்த வருமானத்தில், குறைந்தபட்சம் 40% ஆனது நேரடியாக உணவு மற்றும் பான சேவைத் திணைக்களம் மூலம் உழைக்கப்பட்டதாகவிருக்கும். உணவு மற்றும் பான சேவைத் திணைக்களமானது துறை ஆக்கத்திறன் ஊக்குவிப்பிற்கு மிகவும் பொருத்தமானதாகும், ஏனென்றால் இங்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலாகவுள்ளது.

 

 

வேலைப் பாத்திரங்கள்

ஆரம்ப மட்டம்:

கட்டளை ஏற்பவர்: பெயர் குறிப்பிடுவது போல இந்த நபர் விருந்தினர்களிடமிருந்து உணவு மற்றும் பானங்களிற்கான கட்டளைகளை ஏற்கிறார். உணவகத்தைப் பொறுத்து அவர்கள் குறிப்புகளை எடுக்கலாம் அல்லது சாதனமொன்றில் பதிவு செய்யலாம். எந்த வகையிலும், விருந்தினர்கள் பெரும்பாலும் அவர்களிடம் பரிந்துரைகளைக் கேட்பார்கள், அதன்படி விருந்தினர்களுக்கு அவர்கள் ஆலோசனை வழங்க முடியும்.

பார்டெண்டர்: பார்டெண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு பானங்களை கலந்து, அலங்கரித்து பரிமாறுகிறார்கள். அவர்கள் மதுசாலைப் பொறுப்பாளர்கள் அல்லது மதுபானம் கலந்துகொடுப்போர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மதுக்கடைகள், கழகங்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் கெசினோக்கள் உள்ளிட்ட பல்வேறு உணவகங்களில் பார்டெண்டர்கள் பணியாற்றுகின்றார்கள். அவர்கள் வார இறுதி நாட்களிலும், தாமதமான நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூட வேலை செய்ய முனைகிறார்கள்.

உணவு பரிமாறுபவர்: சர்வர் எனவும் அழைக்கப்படும் ஒரு உணவு பரிமாறுபவர், ஒரு உணவகத்தில் விருந்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் ஒரு நேர்மறையான அனுபவத்தை உருவாக்குவதற்காகப் பணியாற்றுகின்றார். அவர்கள் பரிந்துரைகளைச் சேய்வதுடன் கேள்விகளுக்கு பதிலளித்து முறைப்பாடுகளை நிர்வகிக்கிறார்கள்.

அறைr; சேவை பரிமாறுபவர்: கவனமாகவும் திறமையாகவும் கட்டளைகளைத் தயாரித்தல், உணவுத் தட்டுகளை ஒழுங்கமைத்தல் மற்றும் விருந்தினர் அறைகளுக்கு பொருட்களை வழங்குதல் ஆகியவற்றிற்கு இந்த நபர் பொறுப்பாகவிருப்பார்.

விருந்துகள் பரிமாறுபவர்: விருந்துகளில் உலாவி வரும் நிலையற்ற உணவு பரிமாறுபவர்களையே விருந்துகள் பரிமாறுபவர் என்ற பதம் குறித்து நிற்கின்றது. விருந்தினர்களை வைபவங்களில் தங்க வைப்பதற்கும், அவர்களின் தேவைகளை ஏற்று, அவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கும் விருந்துகள் பரிமாறுபவர்கள் பொறுப்பாக இருப்பார்கள்.

அறை சேவை கேப்டன்: விருந்தினர்களுக்கு இனிமையான மற்றும் மறக்கமுடியாத உணவு அனுபவம் அறையினுள் வழங்கப்படுவதை இவர் உறுதிப்படுத்துகின்றார். இவர் அமைப்பு, பராமரிப்பு, தூய்மை மற்றும் விருந்தினர்களுக்கு உணவு மற்றும் பானச் சேவைகளை வினைத்திறனாக வழங்குவதைக் கண்காணிப்பதற்குப் பொறுப்பாகவுள்ளார்.

விருந்து கேப்டன்: உணவு விருந்துடன் கூடிய பெரிய வரவேற்புகள் மற்றும் நிகழ்வுகள் உயர்தரத்தில் நடாத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, விருந்து கேப்டன் முழு விருந்து பணியாளர்களையும் நிர்வகிக்கிறார். அவர் விருந்து சேவைகள் பணியாளர்களுக்கும் சமையலறை பணியாளர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பாளராக பணியாற்றுவதுடன் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவுகிறார்.

உணவக கேப்டன்: செப் டீ ரேங் எ னவும் அழைக்கப்படும் கேப்டன், உணவகச் செயற்பாடுகள், சமையலறை மற்றும் உணவு பரிமாறும் பணியாளர்களிடையிலான தொடர்பாடல், உணவகத்தின் தோற்றம், பாதுகாப்பு, உணவகப் பொறுப்பு மற்றும் தூய்மைக்குப் பொறுப்பாகவுள்ளார்.

மேற்பார்வை மட்டம்

உணவக மேற்பார்வையாளர்: உணவகங்கள் சீராக இயங்குவதை உறுதிப்படுத்துவதற்காக உணவக மேற்பார்வையாளர்கள் அனைத்து உணவக நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுகிறார்கள். அவர்கள் உணவக பணியாளர்களுக்கு பயிற்சியளித்து மேற்பார்வையிடுவதுடன், உணவுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் இணங்குவதை உறுதிப்படுத்தி, வாடிக்கையாளர் முறைப்பாடுகளையும் தீர்த்துவைக்கின்றார்.

விருந்து மேற்பார்வையாளர்: விவரம் மற்றும் தரமான சமர்ப்பித்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்தும் அதேவேளை, அமைப்பு, உணவு வழங்கல், பரிமாறுதல் மற்றும் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட விருந்து அல்லது நிகழ்வின் அனைத்து அம்சங்களையும் இந்த நபர் மேற்பார்வையிடுகிறார். விருந்து மேற்பார்வையாளர்களும் விருந்து பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள்.

அறைச் சேவை மேற்பார்வையாளர்: அறையில் உணவருந்துவதை முகாமை செய்பவர் என்றும் அழைக்கப்படுபவர், இந்த நபர் அறையில் உணவருந்துவதற்கான ஏற்பாடு, முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் மற்றும் அனைத்து செயல்பாட்டு அம்சங்களுக்கும் உதவுகிறார்.

நிறைவேற்று மட்டம்:

உதவி உணவு மற்றும் பான சேவைகள் (F&B) முகாமையாளர்: திணைக்களமானது அதன் திறனில் செயல்படுவதை உறுதி செய்வதில் உணவு மற்றும் பான சேவைகள் (F&B) முகாமையாளருக்கு உதவுகின்றார். முகாமையாளர் இல்லாத போது, உதவி முகாமையாளர் சமையலறை பணியாளர்களுக்குப் பொறுப்பாக இருந்து, கடமைகளை வழங்கி, பணி ஒழுங்கான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்கிறார். உதவி முகாமையாளரின் பணி ஒரு முகாமையாளரின் வேலைக்குக் குறைவானது அல்ல. உணவு மற்றும் பானங்களுக்கான சிறந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள் என்பதை இவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

உணவு மற்றும் பான சேவைகள் (F&B) முகாமையாளர்: ஒரு ஹோட்டலில் உள்ள அனைத்து உணவகங்களின் செயல்பாடுகளுக்கும் பொறுப்பானவர். உணவு மற்றும் பானங்கள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை என்பதை உறுதிப்படுத்துவது இவர்களின் பொறுப்பாகும். இவர்கள் வாடிக்கையாளரின் முறைப்பாடுகளைக் கையாண்டு, நிறுவனத்தின் கொள்கைகளை உருவாக்கி, உணவு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கப் பணியாற்றுகின்றனர். இவர்கள் அறிக்கைகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களையும் தயாரிக்க வேண்டும்.

 

தொழில் முன்னேற்றம்

உணவு மற்றும் பான சேவைகள் (F&B) திணைக்களத்தில் நீங்கள் அர்ப்பணிப்புடனும், கடின உழைப்பாளியாகவும், நல்ல தகவல் தொடர்பு திறன் கொண்டவர்களாகவும் இருந்தால் முன்னேறுவது மிகவும் எளிதானதாகும். ஆரம்ப மட்டத்தில் உங்கள் ஆரம்ப ஆண்டுகளில் நீங்கள் சிறந்து விளங்க முடிந்தால், நீங்கள் உங்கள் 30 வயதிற்குள் கூட முகாமையாளராக முடியும். முன்னர் குறிப்பிட்டபடி, உணவு மற்றும் பான சேவைகள் (F&B) திணைக்களத்தில் பணியாற்றுவது சுவாரஸ்யமானதாகவும், அதேயளவு சவாலானதாகவும் உள்ளது.

பதவியுயர்வுகள்

உணவு மற்றும் பான சேவைகள் (F&B) திணைக்களமானது, பொதுவாக மற்ற திணைக்களங்களுடன் ஒப்பிடும்போது அதிக ஊழியப் புரள்வினைக் கொண்டுள்ளது. ஏனெனில் பணியாளர்கள் எப்போதும் ஹோட்டலுக்குள் அல்லது வெளியில் அடுத்த பதவி உயர்வினைத் தேடுவார்கள். நீங்கள் விரைவாக கற்கும் நபராக இருந்தால், நீங்கள் சேவை செய்வதில் ஆர்வமாக இருந்தால், நீங்கள் முன்னேற அதிக நேரம் எடுக்காது. உங்கள் பணியாளர் தட பதிவானது தீர்க்கப்படாத முறைப்பாடுகள், தூய்மையற்ற தன்மை அல்லது சமூகமளிக்காமை போன்ற சிக்கல்களால் நிரம்பியிருந்தால், முன்னேறுவதற்கு உங்களுக்கு அதிக காலம் எடுக்கும். உயர்நிலைப் பதவிகளில் இருக்கும் சில சிறந்த ஹோட்டல்காரர்களுடன் நீங்கள் பேசினால், அவர்கள் ஒரு காலத்தில் பாத்திரங்களைக் கழுவுபவர்களாக அல்லது பணியாளர்களாக இருந்திருப்பது தெரிய வரும்.

 

அறிவும் திறன்களும்

அறிவு

நீங்கள் விருந்தினர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதால் ஆங்கில அறிவைப் பெறுவது அவசியமாகும். நீங்கள் ஒரு உணவு பரிமாறுபவராக இருந்தாலும் அல்லது முகாமையாளராக இருந்தாலும், ஹோட்டல் வளாகத்திற்குள் நீங்கள் எங்கிருந்தாலும் விருந்தினர்கள் உங்களை அணுகி உங்கள் உதவியை நாடுவார்கள். முறைப்பாடொன்று எழுந்தால், அதை விரைவாக தீர்க்க நீங்கள் தயாராகவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.

ஆரம்ப மட்டம்

மேற்பார்வை மட்டம்

நிறைவேற்று மட்டம்

உங்களுக்குப் பல வருட அனுபவம் மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழு (TVEC) அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற நிறுவனமொன்றின் டிப்ளோமா அல்லது பட்டம் இருந்தால், அது ஒரு நிறைவேற்றுப் பதவியை இலக்காகக் கொள்ள உதவும். அனுபவம் மட்டுமல்லாது, கடந்த கால பணியாளர் பதிவுகள் மற்றும் கல்வித் தகுதிகள் இந்த மட்டத்தில் செல்வாக்குச் செலுத்துவதுடன், உங்கள் வயதும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பல பணியாளர்களைக் கையாள வேண்டியிருக்கும், உங்கள் கடமைக்கு இடையில் மனிதவளப் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டியிருக்கும் என்பதால் உங்கள் முதிர்ச்சி நிலை மிகவும் முக்கியமானது. உங்கள் மனோபாவம், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்கள், அணுகுமுறை மற்றும் ஆளுமை ஆகியன உங்களை இங்கு பொருத்தமான வேட்பாளராக மாற்றுவதில் நீண்ட தூரம் செல்வாக்குச் செலுத்துகின்றன. விருந்தினர் முறைப்பாடானது அற்பமானதாகவோ அல்லது நியாயமற்றதாகவோ தோன்றும் நிகழ்வுகள் இருக்கலாம், ஆனால் அது விருந்தினருக்கு ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கும். இது போன்ற நிகழ்வுகளில், ஒரு முகாமையாளர் கோபப்படுவதும் எதிர்மறையாக நடந்துகொள்வதும் சரியாக இருக்காது. நிலைமையைக் கையாளும் விதமாவது முழு ஹோட்டலின் நற்பெயரிலும் செல்வாக்குச் செலுத்தும்.

திறன்கள்

 

பணியமர்த்தல் செய்முறை

ஏனைய திணைக்களங்களைப் போலல்லாது, மனிதவள முகாமையாளர்கள் உங்கள் விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளின் கடிதங்களில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். தாங்கள் பணியமர்த்தும் நபர் அவர்களுக்கு ஒரு சொத்தாக இருப்பார் என்பதை தொழில்வழங்குநர்கள் அறிந்து கொள்ள வேண்டும், குறிப்பாக இந்தத் திணைக்களத்திலுள்ள பணியாளர்கள் எப்போதும் விருந்தினர்களுக்கு வெளிப்படுவார்கள். நேர்காணலில் நீங்கள் எவ்வாறு உங்களை முன்வைக்கிறீர்கள் என்பது குறித்து நீங்கள் தீர்மானிக்கப்படுவீர்கள். நீங்கள் எவ்வளவு நன்றாக வருகிறீர்கள், உங்கள் நம்பிக்கையின் நிலை, உங்கள் அணுகுமுறை, தொழில் குறிக்கோள்கள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படும். நீங்கள் ஒரு மேற்பார்வை அல்லது நிறைவேற்றுப் பதவியை இலக்காகக் கொண்டிருந்தால், நீங்கள் ஒரு குழுவால் நேர்காணப்படலாம். ஆனால் நீங்கள் ஆரம்ப மட்டப் பதவியொன்றைத் தேடுகிறீர்களானால், நீங்கள் மனிதவள முகாமையாளரை மட்டுமே சந்திக்க முடியும்.

சம்பள அளவு

ஏனைய அனைத்து ஆரம்ப மட்டங்களையும் போலவே, ஆரம்பச் சம்பளம் அடிப்படைச் சம்பளமாகும். அடிப்படை. இது பௌதீக ரீதியாக தேவைப்படும் வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் முன்னேற முன் குறைந்தது ஒரு வருடமாவது நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆரம்ப மட்டத்தில் நீங்கள் ரூபா .15,000 முதல் ரூபா .25,000 வரை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். சேவை கட்டணத்தில் ஒரு சதவீதத்தையும் நீங்கள் பெறலாம், ஆனால் அது ஹோட்டல் வகை, மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள், அளவு போன்றவற்றைப் பொறுத்ததாகும்.

மேற்பார்வை மட்டத்தில், உங்களது வீட்டிற்குக் கொண்டு செல்லும் சம்பளமாக ரூபா. 25,000 முதல் ரூபா. 35,000 வரையிலான அடிப்படைச் சம்பளம் இருக்கும். சேவை கட்டணங்கள் மற்றும் ஹோட்டல் வழங்கும் பிற கொடுப்பனவுகளுடன் இந்தத் தொகை அதிகரிக்கக்கூடும்.

முகாமைத்துவ மட்டத்தில், நீங்கள் ரூபா. 40,000 இற்குமதிகமாகச் சம்பாதிப்பீர்கள். ஹோட்டல் மற்றும் உங்கள் பொறுப்புகளைப் பொறுத்து இது மீண்டும் மாறுபடும்.

Women in Tourism

Let her learn, let her explore, let her see the world

Sri Lanka's tourism industry offers a number of career opportunities for women. Here's a glimpse into some of them.

Watch Video