திறன்கள் மையம்
அறிவை மையப்படுத்திய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் நாட்டின் மனித வளத்தினை அபிவிருத்திசெய்ய வேண்டியதன் அவசியத்தினை இலங்கை ஜனாதிபதியின் தேசிய கொள்கைகள் சட்டகமான “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு“ சுட்டிக்காட்டுகிறது. வருங்கால சந்ததியினரை உறிபத்தித்திறன்மிகு குடிமக்களாக மாற்றுதற்கு புதிய அறிவினையும் திறன்களையும் வழங்குவது எவ்வாறு முக்கியத்துவம் வகிக்கிறது என்பதனை அது மேலும் விவரிக்கிறது. இளம் தொழில் முனைவோர்களால் இயக்கப்படும் ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றி இச்சட்டகம் கவனம் செலுத்துவதுடன் சகல பொருளாதாரத் துறைகளிலும் பரந்துபட்ட வாய்ப்புக்களையும் ஊக்குவிப்புகளையும் வழங்குவதற்கும் உறுதிமொழி வழங்குகிறது.
இத்தொலைநோக்குப் பார்வையினை எட்டுவதற்கு கூட்டணி பாடுவது மட்டுமல்லாது ஆரம்ப கட்டமாக திறன்கள் மையம் என்றதொரு முயற்சியையும் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் சுற்றுலாத்துறையை கல்வி, அறிவுப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாடு என்பவற்றினூடாக விருத்திசெய்வதற்கு ஆதரவும் அளிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் தரமான கற்கைகளுக்கான ஒரு நுழைவாயிலாக தொழிற்பட்டு வரும் எமது திறன்கள் மையம், இயல்திறமுடைய இளம் தொழில் முனைவோர், மற்றும் கைத்தொழிலாளர்களை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறையில் நிலவும் தொழில் பாதைகள் மற்றும் வாய்ப்புக்கள் பற்றிய முக்கிய வளங்களையும் தகவல்களையும் வழங்கியும் வருகின்றது. எமது திறன்கள் மையத்தினால் வழங்கப்படும் வளங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கு சுற்றுலாத் துறைக்குள் நிலவும் பலதரப்பட்ட வாய்ப்புக்களை கண்டறிய முடிவதுடன் உங்களது அறிவு, மற்றும் திறன் மேம்பாட்டுக்கு ஊக்குவித்து உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் உதவுகிறது.


