சிறுவர் பராமரிப்பு உதவியாளர்

அதிக எண்ணிக்கையிலான பெற்றோர்கள் தங்கள் இளம் குழந்தைகளுடன் ஓய்வுக்காக பயணிப்பதால், உயர்தர ஹோட்டல்களுக்கும் சுற்றுலா விடுதிகளுக்கும் உள்ளகக் குழந்தை பராமரிப்பு சேவைகளை வழங்குவது முன்னுரிமையாகிவிட்டது. இந்த பெறுமதி சேர் சேவையானது வழங்கப்படுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாகவும் நன்றாகவும் ஹோட்டல் வளாகத்தினுள் பராமரிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து, தமது ஓய்வு நேரத்தை அனுபவிக்க முடியும்.

வேலைப் பாத்திரங்கள்

சிறுவர் பராமரிப்பு உதவியாளராக, ஹோட்டல் அல்லது வளாகத்தின் விளையாட்டு அறை அல்லது விளையாட்டு பகுதியில் சிறுவர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பினை நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். உங்கள் கவனிப்பில் சிறுவர்கள் ஒப்படைக்கப்படும்போது, நீங்கள் அவர்களை விளையாட்டு அறையின் எல்லைக்குள் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட வைக்க வேண்டும். உங்கள் பராமரிப்பில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் அவர்களின் ஒவ்வாமை மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட எழுத்துமூலமான தகவல்களை நீங்கள் பராமரிக்க வேண்டும்.

தொழில் முன்னேற்றம்

நீங்கள் உதவியாளராகத் தொடங்கலாம், பின்னர் குழந்தை பராமரிப்பு உதவியாளர் நிலைக்கு முன்னேறலாம். இந்தப் பதவியில் பணியாற்ற நீங்கள் பொருத்தமானவரா என்பதை தீர்மானிக்கும்போது, உங்கள் நடத்தை, விருந்தினர்களால் நீங்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டீர்கள் மற்றும் நீங்கள் பெற்ற பரிந்துரைகள் என்பன கணிசமானளவில் செல்வாக்குச் செலுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அறிவும் திறன்களும்

Tஇந்த பதவிக்கான அடிப்படை தேவை ஒரு சாதாரணதரத் தகைமையாகும். ஒரு பாலர் பாடசாலை அல்லது மொன்டிசூரித் தகைமையானது பெரும்பாலான நிறுவனங்களால் எதிர்பார்க்கப்படும். ஆங்கில மொழியில் சரளமாக இருப்பது அவசியமாகவுள்ளதுடன் வெளிநாட்டு மொழியொன்றில் தேர்ச்சி பெறுவது மேலதிகத் தகைமையாகக் கொள்ளப்படும்.

திறன்கள்

பணியமர்த்தல் செயல்முறை

நம்பகமான சிறுவர் பராமரிப்பு உதவியாளர்களைக் கண்டுபிடித்து தக்கவைத்துக்கொள்வது பல ஹோட்டல்கள் எதிர்கொள்ளும் ஒரு சவாலாகும். தொழில்தருநர்கள் குறிப்பிட்ட கல்வி, சான்றிதழ்கள் மற்றும் அனுபவ நிலைகளைப் பார்ப்பதுடன் சிறுவர்களின் அபிவிருத்தியைப் பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். முன்பள்ளிப் பருவக் கல்வியில் பயிற்சியளித்தலானது, உங்கள் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் தேவைகள் மற்றும் ஆளுமைகளுக்கு நீங்கள் உணர்திறனாகவுள்ளதுடன் பதிலளிக்கிறீர்கள் என்பதையும் உறுதி செய்யும்.

சம்பள அளவு

சிறுவர்களைப் பராமரிப்பதற்கும் கவனித்துக்கொள்வதற்கும் நிறைய பொறுமையையும் சிறப்புத் திறன்களும் தேவைப்படுகின்றன. எனவே, இது பொதுவாக நல்ல ஊதியம் வழங்கப்படும் பதவி நிலையாகும். இலங்கையில், இதற்கான சம்பளம் ரூபா .30,000 முதல் ரூபா .50,000 வரை இருக்கலாம்.

Women in Tourism

Let her learn, let her explore, let her see the world

Sri Lanka's tourism industry offers a number of career opportunities for women. Here's a glimpse into some of them.

Watch Video