மாநாடு மற்றும் நிகழ்வு முகாமைத்துவம்

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதில் மாநாடுகளும் நிகழ்வுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விழாக்கள், கொண்டாட்டங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஒரு நாட்டை அல்லது குறிப்பிட்ட இடத்தைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.. MICE சுற்றுலாத்துறை (கூட்டங்கள், சலுகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) சுற்றுலாத்துறைக்கு முக்கியமானதாகும். ஏனெனில் இது நாட்டிற்கு பெரிய குழுக்களை ஈர்க்கிறது.

நிகழ்வு முகாமையாளர் தனிப்பட்டவர்கள் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளருக்காக நிகழ்வுகளைத் திட்டமிட்டு, ஒழுங்குபடுத்தி மேம்படுத்துகின்றார். நிகழ்வுகளை கருத்தியல் செய்தல், வடிவமைத்தல், திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் அவர்கள் ஈடுபட வேண்டும், சில சமயங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக அவர்கள் நிகழ்வுகளை சந்தைப்படுத்த வேண்டி ஏற்படும்.

இது ஒரு கவர்ச்சியான வேலையாகக் கருதப்படலாம், ஏனெனில் நீங்கள் ஒரு நிபுணராகக் கருதப்பட்டால், சில பெரிய பெயர்களால் நீங்கள் தேடப்படுவீர்கள். நீங்கள் சுற்றுலாத்துறையில் ஒரு ஹோட்டல், உணவகம் அல்லது ஏனைய நிறுவனமொன்றில் நிகழ்வு முகாமையாளராகப் பணிபுரிகின்றீர்களென்றால், உயர்மட்ட நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

வேலைப் பாத்திரங்கள்

உதவி முகாமையாளர் அல்லது முகாமையாளர் என இந்த முக்கிய தொழில்துறையில் உங்களுக்குப் பொதுவாக இரண்டு பதவிகள் மட்டுமே உள்ளன, ஒரு நிகழ்வு முகாமையாளரின் பாத்திரம் அவர் பணிபுரியும் நிறுவனம் மற்றும் தொழிற்துறையைப் பொறுத்து மாறுபடும். ஒரு நிகழ்வைத் திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கு நிகழ்வு முகாமையாளர்கள் மட்டுமே பொறுப்பாகவிருப்பர். முகாமையாளருக்கு உதவியாக ஒரு முழுக் குழுவுமே இருந்தாலும் கூட, அனைத்தும் திட்டமிட்டவாறு இயங்குவதை உறுதிசெய்வது முகாமையாளரின் பொறுப்பாகும். நிகழ்வு முகாமையாளர்கள் வாடிக்கையாளர்கள், நிகழ்வு வழங்குனர்கள் மற்றும் நிகழ்விட முகாமையாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகிறார்கள்.

தொழில் விவரணம்

தொழில் முன்னேற்றம்

இந்த துறையில் மிகவும் பொதுவான பதவிகளாகிய உதவி முகாமையாளர் மற்றும் முகாமையாளர் ஆகிய இரண்டும் நிறைவேற்றுப் பதவிகளாகும். கனிஷ்ட பதவியில் இருந்து சிரேஷ்ட நிலைக்கு முன்னேறுவதைத் தவிர, முன்னேறுவதற்குத் தெளிவான பாதைகள் இல்லை. இருப்பினும், நீங்கள் ஒரு சிறிய அளவிலான நிகழ்வு நிறுவனத்திலிருந்து பெரிய அளவிலான கம்பனிக்கு முன்னேறலாம். உங்களுக்கு கணிசமான ஆண்டு அனுபவம் கிடைத்தவுடன் மாற்றுவழியாக, உங்கள் சொந்த நிகழ்வு கம்பனியைத் தொடங்கலாம்.

அறிவும் திறன்களும்

அனுபவத்திற்கு மேலதிகமாக, இந்தத் துறையில் ஒரு தொழிலைத் தொடங்க சாதாரண நிலை தகுதிகளும் உங்களுக்கு இருக்க வேண்டும். பெரும்பாலான தொழில்தருநர்கள் உங்கள் திறமைகள், ஆளுமை மற்றும் அனுபவம் ஆகியவற்றில் அதிக அக்கறை கொண்டுள்ளதால், இந்த பாத்திரத்திற்கு உங்களுக்கு பட்டத் தகைமை தேவையில்லை. உங்கள் வாய்ப்புகளை மேம்படுத்த விரும்பினால், நிகழ்வு முகாமைத்துவம், பொது உறவுகள், சந்தைப்படுத்தல், ஹோட்டல் அல்லது உணவு தருவிப்பு, அல்லது ஓய்வு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றில் பட்டம் அல்லது டிப்ளோமா / உயர் தேசிய டிப்ளோமா பெற்றிருப்பது நிச்சயமாக உதவும்.

திறன்கள்

பிரச்சினை தீர்க்கும் திறன்

நீங்கள் ஒரு நிகழ்வு முகாமைத்துவ கம்பனியில் வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் மனிதவள முகாமையாளர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரால் நேர்காணல் செய்யப்படலாம், ஆனால் நீங்கள் ஒரு ஹோட்டலில் விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் மேலாளர்கள் குழுவால் பேட்டி காணப்படுவீர்கள். அவர்கள் உங்களை பல்வேறு பகுதிகளில் பரிசோதிப்பர். பணம் செலுத்திய அல்லது தன்னார்வத்துடன் மேற்கொண்ட எந்தவொரு தொடர்புடைய அனுபவமும் இந்தத் துறையில் நுழைவதற்கு அவசியமாகும். பாடசாலையில் நிகழ்வுகளை ஒழுங்கமைக்க நீங்கள் உதவி செய்திருந்தால், அதை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்தலாம். நீங்கள் இன்னும் உங்கள் உயர் கல்வித் தகுதியைப் பின்தொடர்கிறீர்கள் என்றால், உங்கள் பல்கலைக்கழகத்திற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம், தொண்டர் நிறுவனங்கள் அல்லது உங்களுக்கு தொடர்புள்ள பிற நிறுவனங்கள் மற்றும் கழகங்களுக்கு உங்கள் நேரத்தை அதிகம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விருந்தோம்பல் துறையில் அல்லது விற்பனை, சந்தைப்படுத்தல் அல்லது வாடிக்கையாளர் சேவை பாத்திரத்தில் பெற்ற அனுபவமும் பயனுள்ளதாக இருக்கும்.

சம்பள அளவு

நீங்கள் ஒரு ஹோட்டல், நிகழ்வு முகாமைத்துவக் கம்பனி, மாநாட்டு மத்திய நிலையம், பெரிய வணிக நிறுவனம், நிகழ்வு இடம், விளம்பரம் அல்லது மக்கள் தொடர்பு நிறுவனம், பொது ஈர்ப்புமிக்க இடங்கள் போன்ற இடங்களில் பணிபுரிந்தால், உங்கள் சம்பளம் ரூபா. 35,000 இலிருந்து தொடங்கும். நீங்கள் ஒரு ஹோட்டலில் பணிபுரிந்தால், சேவை கட்டணமாக ஒரு தாராளமான சதவீதத்தையும் பெறலாம்.