அனுபவ புரவலர்கள்
அனுபவம் என்பது பாரம்பறிய சுற்றுப்பயணமோ அல்லது ஒரு தளத்தை சாதரணமாக பார்வையிடுவதை விட அதிக ஈடுபாட்டைக் கொண்ட ஒரு செயலாகும். இது உண்மையானதாக அமைவதோடு பயணிகளுக்கு குறிப்பிட்ட இடம் அல்லது சுற்றுலா புள்ளியைப் பற்றிய உள்ளூர் பார்வையை கொடுக்கிறது. உள்ளூர்வாசிகளால் தங்கள் நகரம்/ கிராமம், கலாச்சாரம், உணவு, கைவினைப்பொருட்கள் அல்லது வாழிக்கை முறை ஆகியவற்றைப் பற்றி விசேடமான தகவல்களை வழங்க அனுபவம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வழங்கப்படுகின்றது.
உங்கள் நகரம் அல்லது சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு அல்லது சுற்றுப்பயணத்தை உருவாக்க உங்களுக்கு விருப்பம் இருக்குமாயின் அது பயணிகளுக்கு உண்மையிலேயே தனித்துவமான அனுபவத்தைப் பெற உதவும்: அப்படியாயின் ஒரு அனுபவ புரவலரின் வேலை நீங்கள் கருத்தில் கொள்ள விரும்பும் ஒன்றாக இருக்கலாம்.
இது மிகவும் முறைசாரா தொழிலாக அமைய காரணம், பின்பற்றுவதற்கு கட்டமைக்கப்பட்ட பாதை இல்லை, அத்தோடு குறிப்பிட்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என்றும் இல்லை. இங்கு உந்து சக்தியாக அமைவது, நீங்கள் விரும்பும் ஒன்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களிடமுள்ள ஆர்வமும் உற்சாகமுமாகும்.
அனுபவ புரவலர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் போல தேசிய அல்லது ஓட்டுநர் வழிகாட்டிகள் போல என நினைத்து குழப்பமடையத் தேவையில்லை, அவர்கள் பின்னராக மாநில அதிகாரியினால் உரிமம் பெறுவார்கள் மற்றும் அது உத்தியோகபூர்வமான பதவியாக அமையும்.
அனுபவ புரவலர்களுக்கு ஒரு செயல்பாட்டை உருவாக்கி அதனை அவர்களின் தனித்துவமான வழியில் வழங்க சுதந்திரம் உள்ளது. தெரு உணவு, சுற்றுப்பயணங்கள், வரலாற்று தளங்கள் ஊடான சைக்கிள் ஓட்டம், ஒரு நகரத்தினூடான புகைப்பட சுற்றுப்பயணம், சமையல் அனுபவங்கள், கலை அம்சங்கள், தியான அமர்வுகள், மலையேற்றங்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட நகர சுற்றுலா ஆகியவை நீங்கள் நடத்தக்கூடிய அனுபவ எடுத்துக்காட்டுக்கள் ஆகும். மக்கள் அனுபவிக்க விரும்பும் ஒரு சிறப்பு செயல்பாட்டை உருவாக்கி நிர்வகிப்பதே இதன் நோக்கமாகும்.

அறிவு
இது முறைசாரா நிலைபாடு என்பதால், படிப்புக்கள் எதுவும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. செயல்படுத்துபவர் வெறுமனே இந்த விடயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும், செயல்பாட்டிற்காக நன்கு சிந்தித்து திட்டமிடகூடியவராகவும் இருத்தல் வேண்டும். இது நீங்கள் ஒரு பொழுதுபோக்காக அல்லது முழுநேர வேலையாக ஈடுபடக்கூடிய ஒன்றாகும்.

திறன்கள்
- மக்களை ஈடுபட வைக்கும் கதைகள் மற்றும் கதை சொல்லும் திறன்
- புகைப்படம் எடுக்கும் திறன்
- வெளிப்புறங்கள் மீது ஆர்வம்
- இடங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி மேலும் அறிய உள்ள ஆர்வம்
- நல்ல தகவல் தொடர்பு திறன்
- நல்ல ஒழுங்குமுறை மற்றும் ஒருங்கிணைப்பு திறன்

சம்பள அளவு
இந்த வகை பதவிக்கான சம்பள அளவு நீங்கள் எத்தனை நடவடிக்கைகளை நடத்த விரும்புகிறீர்கள் மற்றும் எத்தனை விருந்தினர்களுக்கு உதவ விரும்புகின்றீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் ஒரு சுயதொழில் அனுபவ புரவலராக இருந்து ஒரு செயலுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்கலாம். மாறாக, நீங்கள் ஒரு மேலாண்மை நிறுவனத்தில் அல்லது அனுபவமுள்ள நிறுவனத்தில் பணியாற்றலாம், அவர்கள் ஒரு செயல்பாட்டை நடத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு வழங்குவார்கள்.