முன் அலுவலகம்
முன் அலுவலகமானது, பாரம்பரியமாக வரவேற்பறை என்ற பெயர் மூலம் அறியப்பட்டு வருகின்றது. இது ஹோட்டலொன்றின் மிகவும் புலப்படக்கூடிய இடமாகும். இது நிறுவனத்தைப் பற்றிய மனத்தோற்றத்தை முதன்முதலாக விருந்தினரின் மனதில் பதியச் செய்யும் இடமாகவிருப்பதுடன், அனைத்து பணியாளர்களும் விருந்தினர்கள் வரவேற்பையும் மதிப்பையும் உணருவதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த முறை நீங்கள் ஒரு ஹோட்டலுக்குச் செல்லும்போது, பணியாளர்கள் எவ்வாறு வித்தியாசமாக உடையணிந்துள்ளனர் என்பதையும், வரவேற்பு பகுதியானது கட்டடக்கலை ரீதியாக எவ்வாறு மகிழ்விக்கின்றது என்பதையும் அவதானியுங்கள்.
முன் அலுவலகமானது, விருந்தினர்களை அழைப்பதாகத் தோன்றினாலும், வேலை செய்வதற்கான பரபரப்பான இடங்களில் இதுவும் ஒன்றாகும். விருந்தினர்களை வரவேற்றல் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், ஹோட்டல் பற்றிய மிகச்சிறந்த மனத் தோற்றத்தை அளித்தல், சிக்கல்களைத் தீர்த்தல், மின் தொடர்பிணைப்புப் பலகை, கணக்குகள், காசாளர் மற்றும் இரவுநேரக் கணக்காய்வு, முன் மேசை, வரவேற்பு மற்றும் விருந்தினர் உறவுகள் உள்ளிட்ட பிற பணிகளைக் கையாளும் பொறுப்புகள் ஆகியன இதில் அடங்கும்.

1. வேலைப் பாத்திரங்கள்
ஆரம்ப மட்டம்:
வரவேற்பாளர் : பார்வையாளர்களை வாழ்த்துதல், அழைப்புகளுக்கு பதிலளித்தல், விருந்தினர்களின் கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் ஒட்டுமொத்த வரவேற்புச் சூழலை வழங்குவதற்குப் பொறுப்பானவர் ஆவார்.
விருந்தினரை அறைக்குக் கூட்டிச் செல்லும் பணியாளர் (Bell Boy): விருந்தினர்களை வாழ்த்தி வரவேற்பதும், அவர்களின் பிரயாணப்பொதிகளிலிருந்து விடுவிப்பதும் இவர்கள் தான். இவர்கள் விருந்தினர்களுக்கு அறைகளையும் காட்டக்கூடும். அவர்கள் பணியாளர்களை மேற்பார்வை செய்பவரின் (Bell Captain)கீழ் வேலை செய்கிறார்கள்.
பயிலுநர்: பணியில் இருந்துகொண்டு முன் அலுவலகத்தின் பல்வேறு செயல்பாடுகளை இன்னும் கற்றுக் கொண்டிருப்பவர் இந்ந நபராவார்.

மேற்பார்வை மட்டம்:
விருந்தினர் தொடர்பு அலுவலர்: விருந்தினர்களை வரவேற்பதோடு மட்டுமல்லாமல், விருந்தினர் தொடர்பு அலுவலர் விருந்தினர்களின் முறைப்பாடுகளையும் கையாளுவார். பெரும்பாலும், அவர்கள் விருந்தினர்களைப் பெயரால் அறிந்துகொண்டு, அவர்களைக் காணும்போதெல்லாம் அவர்களுடன் பேசுவார்கள்.
பணியாளர்களை மேற்பார்வை செய்பவர் (Bell Captain): பணியாளர்களை மேற்பார்வை செய்பவர் (Bell Captain) பணி அட்டவணையை அமைப்பதன் மூலமும், கடமைகளை ஒதுக்குவதன் மூலமும், அவர்களின் அன்றாட வேலைகளை மேற்பார்வையிடுவதன் மூலமும் பெல் பணியாளர்களை நிர்வகிக்கிறார். இவர்கள் வரவேற்பு உதவியாளர் கீழ் வேலை செய்கிறார்கள்.
வரவேற்பு உதவியாளர் (Concierge): வரவேற்பு உதவியாளர் (Concierge) ஒரு மேசைக்கு ஒதுக்கப்படவில்லை, ஆனால் எப்போதும் பயன்படுத்தக் கூடியவர்களாவிருப்பதுடன், ஆலோசனை தேவைப்படும் எந்த விருந்தினர்களுக்கும் உதவ தயாராக இருப்பர். பெரும்பாலும், விருந்தினர்கள் ஹோட்டல் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் (பார்வையிடக் கூடிய இடங்கள் / விமான நிலையம் போன்றன) பற்றிய தகவல்களைக் கேட்க வரவேற்பு உதவியாளரிடம் செல்கிறார்கள்.

நிறைவேற்று மட்டம்:
முன்பதிவு நிர்வாகி: இந்த நபர் அனைத்து தொலைபேசி, மின்னஞ்சல், இணையம் மற்றும் ‘நேரடி’ விசாரணைகளைத் திறமையாகவும் பணிவுடனும் கையாள வேண்டும். முழு மற்றும் தெளிவான தகவலுடன் நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அனைத்து இட ஒதுக்கீடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் அவை துல்லியமாகவும் உடனடியாகவும் கணினியில் உள்ளிடப்படுகின்றன என்பதையும் இவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
முன் அலுவலக நிர்வாகி: இது ஒரு முகாமைத்துவப் பதவியாகும், ஏனென்றால் முன் அலுவலக பணிகளுக்கு மேலதிகமாக தபால் வகைப்படுத்துதல், தரவை கோவைப்படுத்தல் மற்றும் தரவுகளை உள்ளிடுதல் உள்ளிட்ட எழுதுநர் மற்றும் நிர்வாகம் ஆகிய இருவகைப் பணிகளையும் செய்ய நிர்வாகிக்கு அனுபவம் இருக்க வேண்டும்.
விருந்தினர் உறவுகள் நிர்வாகி: அவர்கள் விருந்தினர்கள் முதல்முதலாக ஹோட்டலுக்கு வந்தடையும் போது அவர்களை வரவேற்கிறார்கள், முறைப்பாடுகளையும் கவலைகளையும் திறமையாகவும் சரியான நேரத்திலும் கையாளுகிறார்கள். மிக முக்கிய (VIP) விருந்தினர் வருகை மற்றும் புறப்படுதல்களையும் அவர்கள் மேற்பார்வை செய்கின்றார்கள்.
உதவி முன் அலுவலக முகாமையாளர்: முன் அலுவலக முகாமையாளருக்கு உதவுதல், அனைத்து விருந்தினர்களும் உடனடி மற்றும் தனிப்பட்ட அங்கீகாரத்தைப் பெறுவதை உறுதிப்படுத்துதல், முன் அலுவலக செயல்பாடுகளை கவனித்துக்கொள்வார்கள்.
இரவுநேர வேலை முகாமையாளர்: இவர் கடமை முகாமையாளராவார், இவர் ஒரே இரவு அமர்வு நேரங்களில் அனைத்து ஹோட்டல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகவிருப்பதுடன், அதற்கு மேலதிகமாக, முன் அலுவலக செயல்பாடுகள், இரவுநேரக் கணக்காய்வு, விருந்தினர் மற்றும் ஹோட்டல் காப்பு/ பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதோடு, எல்லா நேரங்களிலும் உயர் தரமான சேவையை உறுதிப்படுத்துகின்றார்.
முன் அலுவலக முகாமையாளர்: முன் மேசை ஒரு தொழில்முறை சேவையை வழங்குகிறது என்பதை உறுதி செய்யும் அதே வேளையில் பணியாளர்களை நிர்வகித்தல் மற்றும் பயிற்றுவித்தல் இவர்களது பணியாகும். இவர்கள் வாடிக்கையாளர், அவர்களின் முறைப்பாடுகள் மற்றும் அவசரநிலைகளைக் கையாளுகிறார்கள்.
வதிவிட முகாமையாளர்: ஹோட்டல் சொத்தில் வசிக்கும் முகாமையாளர் வதிவிட முகாமையாளராவார். இவர் பகல் அல்லது இரவின் எந்த நேரத்திலும் அழைப்பில் இருக்கிறார், மேலும் இவர் ஹோட்டலின் சீரான மற்றும் இலாபகரமான ஓட்டத்திற்கு பொது முகாமையாளருக்கு உதவ வேண்டும். வதிவிட முகாமையாளர்கள் சில நேரங்களில் தளத்தில் வசிக்கும் பொது முகாமையாளர்கள் ஆவர்.
பொது முகாமையாளர்: ஹோட்டலின் அனைத்து நடவடிக்கைகளுக்கும், பணியாளர்கள் மற்றும் விருந்தினர்களின் அன்றாட நிர்வாகத்திற்கும் பொது முகாமையாளர் பொறுப்பாவார். ஒரு சிறந்த விருந்தினர் அனுபவத்தை வழங்குவதற்காக, ஹோட்டலின் நிர்வாக குழு (HOD) மற்றும் ஒட்டுமொத்த ஹோட்டல் இலக்குகளை நிர்வகிப்பதற்கான பொறுப்பு பொது முகாமையாளருக்குள்ளது.

2. தொழில் முன்னேற்றம்
முன் அலுவலகத் திணைக்களமானது, ஹோட்டல் துறையில் வெற்றிப் படிகளில் ஏறுவதற்கு மிகவும் பரபரப்பான, ஆனால் எளிதான துறைகளில் ஒன்றாகும். நீங்கள் ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறையில் ஒரு தொழில் குறித்து தீவிரமாக இருந்தால், ஒருநாள் முகாமையாளராக வர விரும்பினால், நீங்கள் ஒரு மக்கள் நபராகவும், சிக்கல்களைச் சமாளிக்கும் திறனுக்காகவும் அறியப்பட்டால், இது உங்களுக்கான திணைக்களமாக இருக்கலாம்.
2.1 பதவியுயர்வுகள்
நீங்கள் ஆரம்ப மட்டத்தில் தொடங்குகிறீர்களானால், கடமைகளை ஒதுக்குவதற்கு முன்பு ஆறு மாதங்களுக்கு நீங்கள் தகுதிகாண் அல்லது பயிற்சியில் ஈடுபடலாம். நீங்கள் அதைச் செய்தவுடன், அடுத்த பதவியுயர்வுக்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும். ஹோட்டல்களில் பெரும்பாலும், பதவியுயர்வுகள் பெரும்பாலும் வெற்றிடங்கள் மற்றும் கிடைப்பனவின் தன்மையைப் பொறுத்ததாகும். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால் நீங்கள் நினைத்ததை விட விரைவாக முன்னேறலாம்.
உங்கள் பதவி உயர்வுக்கான காரணிகளான பிற முக்கிய குறிகாட்டிகளாவன நேரந்தவறாமை, நேர்மை, நெகிழ்வுத்தன்மை (உங்களுக்கு அழுத்தம் / பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் கையாள முடியுமா என்பது), எளிதில் கோபங்கொள்ளாத மனோபாவம் (நீங்கள் எப்போதும் மந்தமான மனநிலையுடன் இருக்கிறீர்களா என்பது), மக்கள் திறன்கள் (நீங்கள் அணுகக்கூடியவர்களா என்பது) என்பனவாகும்.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் செயல்திறன் முக்கியமானதாகும். உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதைப் பற்றி உங்களுக்கு நல்ல புரிதல் இருப்பதை உறுதிசெய்து, அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் செயல்திறன் நேர்மறையானதாக இல்லாவிட்டால் அல்லது நீங்கள் சிறப்பாக பங்களிக்கவில்லை என்றால், அது உங்களுக்கு எதிராக செயல்படும்.

3. அறிவும் திறன்களும்
உங்கள் திறன்கள் உங்கள் கல்வி அல்லது தொழில்முறை தகுதிகளிலிருந்து வேறுபட்டவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். கல்வி என்பது ஒரு கல்விக் கண்ணோட்டத்தில் விடயத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவையாகும், அதே நேரத்தில் திறன்கள் உங்கள் கடமைகளைச் செய்ய உதவுகின்றன.
3.1 அறிவு
உங்களுக்கு தேவையான அறிவு மற்றும் திறன்களின் தொகுப்பைப் பார்ப்பதற்கு முன், இலங்கையில் ஹோட்டல் வர்த்தகத்திற்கான முதன்மையான தேவைகளில் ஒன்று ஆங்கில மொழியின் சிறந்த அறிவு என்பது கூறப்பட வேண்டும். ஆங்கிலம் ஒரு உலகளாவிய மொழி மற்றும் இலங்கையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, உள்ளூர் விருந்தினர்கள் கூட முதலில் ஆங்கிலத்தில் பேச முனைகிறார்கள். இந்தத் துறையில் பணியாற்ற மொழியின் புரிதல் முக்கியமானது என்பதே இதன் பொருள். நீங்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அது உங்களை ஊக்குவிக்காது, ஏனெனில் விருந்தோம்பல் துறைக்கு அடிப்படை ஆங்கிலம் கற்க உதவும் கற்கைநெறிகள் ஏராளமாக உள்ளன. இந்தத் துறையில் மட்டுமல்ல, நீங்கள் சிறந்து விளங்க விரும்பும் எந்தத் துறையிலும் ஆங்கிலம் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
ஆரம்ப மட்டம்
- குறைந்தபட்சம் சா / த. தகைமைகள் முக்கியமானதாகும். உங்களுக்கு உயர் தரத் தகைமை இருப்பின், அது அனுகூலமாக அமையும். உங்களுக்கு இரண்டுமே இல்லாவிட்டால், நீங்கள் இந்த இணையத்தளத்திலுள்ள “பாடநெறிகள்” எனும் பிரிவிலுள்ள ஒரு தொழிற் கற்கைநெறியினை எப்போதும் தொடரலாம்.
- பாடநெறிகள் மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவின் (TVEC) கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில் பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படும் தேசிய தொழில் தகைமை (NVQ) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன் அலுவலகத்திற்கு உங்களது சாதாரண தரத் தகைமையிலிருந்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்பார்வை மட்டம்
- மேற்பார்வை மட்டத்தில் உங்களது தொழிலை ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு கட்டாயமாக ஆரம்ப மட்டத்தில் வீட்டுப் பராமரிப்புத் துறையில் பெற்ற அனுபவம் இருத்தல் வேண்டும். சில வருட அனுபவம் உங்களுக்கு உதவும். தொழிற் கற்கைநெறியொன்று அல்லது சான்றிதழ் அல்லது டிப்ளோமா மட்டக் கற்கைநெறியொன்று மேலதிக தகைமையாகக் கொள்ளப்படும். குறிப்பிட்ட திணைக்களங்களை இலக்குவைத்த ஆக்கபூர்வப் பாடநெறிகளையும் நீங்கள் பாடநெறி அட்டவணையில் காணலாம்.

நிறைவேற்று மட்டம்
- உங்களுக்கு பல வருட அனுபவமும் மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவின் (TVEC) கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவகமொன்றினால் வழங்கப்படும் டிப்ளோமாவும் இருந்தால், ஒரு நிறைவேற்றுப் பதவியை அடைய வேண்டுமென்ற உங்கள் நோக்கத்திற்கு அவை உதவும். நீங்கள் முன்பு வேலைசெய்த இடங்களில் நீங்கள் எவ்வாறு பங்களித்தீர்கள் என்பதை நிரூபிப்பதன் மூலமும், உங்கள் முன்னைய தொழில்வழங்குனர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை முன்னிலைப்படுத்துவதன் மூலமும் உங்கள் மதிப்பை நிரூபிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேற்பார்வை மட்டத்தில் போலல்லாது, நீங்கள் உங்கள் அணியை எவ்வாறு வழிநடத்தினீர்கள் என்பதை விரிவாகக் கூற வேண்டும். இது உங்கள் விண்ணப்பத்திலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். நிறைவேற்று மட்டத்தில், உங்களுக்கு கீழ் பல பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்பதையும், நீங்கள் முன்மாதிரியான தலைமைத்துவத்தையும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

3.2 திறன்கள்
- வினைத்திறன் மிக்க எழுத்துமூல மற்றும் வாய்மூல தொடர்பாடல்
- நேர்த்தியாக மற்றும் நன்றாக உடையணிந்திருத்தல்
- பிரச்சினைகளைத் தீர்த்தல்
- அழுத்தத்தின் கீழ் அமைதியாக இருக்கக் கூடிய இயலுமை
- ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் விபரம் சார்ந்த தன்மை
- வலுவான ஆளிடைத் தொடர்புத் திறன்கள்
- நெகிழ்வான அட்டவணைகளில் பணியாற்றும் திறன்
- கணணி அறிவு

4. பணியமர்த்தல் செய்முறை
நீங்கள் ஒரு ஹோட்டலில் வேலை செய்ய விண்ணப்பித்திருந்தால், நீங்கள் தனிநபர்கள் குழுவொன்றினால் நேர்காணப்படுவீர்கள். நேர்காணலில் யார் அல்லது எத்தனை நபர்கள் இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்றாலும், மனிதவளம் அல்லது மனித மூலதன முகாமையாளர் நிச்சயமாக வருவார். அவர்கள் இல்லாத நிலையில் உதவி முகாமையாளர் அவரது இடத்தைப் பிடிப்பார். இந்த நேர்காணல் உங்கள் விண்ணப்பத்தை பார்த்து, உங்கள் முன்னைய அனுபவத்தின் அடிப்படையில் கேள்விகளைக் கேட்பார். மந்தமான ஆண்டுகள் அல்லது இடைவெளி ஆண்டுகளைக் கண்டறிவதற்கு அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள், மேலும் அது பற்றிய கேள்விகளை அவர்கள் கேட்கலாம். ஒவ்வொரு நிறுவனத்திலும் நீங்கள் எவ்வளவு காலம் பணியாற்றினீர்கள் அல்லது கடைசி வேலையை ஏன் விட்டு விலகுகின்றீர்கள் என்றும் அவர்கள் உங்களிடம் கேட்பார்கள். இது உங்கள் முதல் வேலை என்றால், மனித வளத் திணைக்களத்தைச் சேர்ந்த நேர்காணல் செய்பவர் உங்கள் இலட்சியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பலாம்.
ஏனைய நேர்காணல் செய்பவர்கள் பல்வேறு அம்சங்களைப் பார்ப்பார்கள், ஏனெனில் உங்களை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். தூய்மை அல்லது உங்களை எவ்வாறு முன்வைக்கிறீர்கள் என்று பற்றித் தீர்ப்பளிக்கப்பட்டால் மனவருத்தமடைய வேண்டாம். ஹோட்டல் வர்த்தகத்தில் இது முக்கியமானதாகும். அனைத்து நேர்காண்பவர்களையும் நீங்கள் கவர்ந்திருந்தால், நீங்கள் ஒரு நேர்மறையான முடிவை எதிர்பார்க்கலாம், ஆனால் அவ்வாறு இல்லாவிட்டால், அவர்கள் உங்களை அழைப்பார்கள் என்று நேர்காணல் செய்பவர்கள் கூறினால், சோர்வடைய வேண்டாம். ஒரு முடிவை எட்டுவதற்கு முன் விண்ணப்பித்த மற்றவர்களுடன் பேச அவர்கள் விரும்புகிறார்கள். சில நேரங்களில் நீங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது நேர்காணலுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

5. சம்பள அளவு
ஒரு ஹோட்டலின் முன் அலுவலகத் துறையில் பணியாற்றுவதற்கு நீண்ட நேரம், கடின உழைப்பு மற்றும் கடினமான சூழ்நிலைகளில் அமைதியாக இருத்தல் என்பன முக்கியமாகும். ஆனால், நீங்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருந்தால், நீங்கள் பற்றுடனும் உறுதியுடனும் இருந்தால், நீங்கள் இதை நிச்சயமாக ஒரு தெரிவாகக் கருத வேண்டும்.
முன் அலுவலகத்திற்கான சம்பள அளவுகள் ஹோட்டலின் வகை, அளவு மற்றும் அமைவிடம் மற்றும் எத்தனை விருந்தினர்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதைப் பொறுத்து மாறுபடும். இலங்கையில், ஆரம்ப சம்பளம் சுமார் ரூ. 10 000 முதல் ரூ. 15 000 ஆகும். சேவை கட்டணத்தில் ஒரு சதவீதத்தையும் நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் மேற்பார்வை நிலைக்குச் செல்வதற்கு முன் வீட்டிற்குச் சம்பளமாக ரூபா.25 000 முதல் ரூபா. 30 000 ஐக் கொண்டு செல்ல முடியும்.
மேற்பார்வை மட்டத்தில், எந்தவொரு சேவை கட்டணமும் இன்றி, உங்களது வீட்டிற்குக் கொண்டு செல்லும் சம்பளமாக ரூபா. 30 000 முதல் ரூபா .35 000 வரை இருக்கும். இலங்கையிலுள்ள தொழிலாளர் சட்டங்களின்படி பணியாளர் சேமலாப நிதி (EPF) போன்ற பிற கழிப்பனவுகள் இருக்கலாம்.
நிறைவேற்று மட்டத்தில் நீங்கள் ரூபா. 35 000 முதல் ரூபா. 40 000 இற்கிடையிலான உயர்ந்த சம்பளத்தைப் பெறுவீர்கள். மீண்டும், இது ஹோட்டலின் அளவு, வகை மற்றும் அமைவிடம் போன்ற முன்னர் குறிப்பிட்ட சில காரணிகளைப் பொறுத்ததாகும். இந்த மட்டத்தில் நீங்கள் சேவைக் கட்டணத்தில் அதிக சதவீதத்தைப் பெறுவீர்கள்.
சேவைக் கட்டணம் என்றால் என்ன?
ஹோட்டல் துறையில் உங்களுக்கு நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் இருந்தால், அவர்கள் இங்கு குறிப்பிட்டதை விட அதிக சம்பளத்தைப் பெறுகிறார்கள் என்றால், அவர்கள் ஒரு நல்ல சேவைக் கட்டணத்தைப் பெறுகிறார்கள். சேவை கட்டணங்கள் வாடிக்கையாளரால் வழங்கப்படும் உபகாரம் அல்லாத (non-tip) ஊதியங்களாவதுடன் அது பணியாளருக்கு சொந்தமானதாகும். நீங்கள் 5 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை அல்லது ஒரு முழு 100 சதவீதம் வரை எங்கும் பெறலாம். நீங்கள் வேலைக்குச் செல்லும்போது அந்த சதவீதம் என்ன என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Women in Tourism
Let her learn, let her explore, let her see the world
Sri Lanka's tourism industry offers a number of career opportunities for women. Here's a glimpse into some of them.
Watch Video