தோட்டக்கலை நிபுணர்

தோட்டக்கலை நிபுணர்கள் புல்வெளிகளை வெட்டுவது முதல் தேசிய பூங்கா அல்லது வன ஒதுக்கத்தை நிர்வகிப்பது வரை எதிலும் ஈடுபடுவார்கள். பொதுவாக இவர்களின் பொறுப்புகளில் தோட்ட அறுவடையை மேற்பார்வை செய்தல், பராமரிப்பு, பீடைக் கட்டுப்பாடு மற்றும் இணக்கத்தை உறுதிப்படுத்துதல் ஆகியன அடங்கும்.

பல ஹோட்டல்களும் சுற்றுலா விடுதிகளும் சொத்தினது அழகியல் தோற்றத்தை அதிகரிப்பதற்கும் தமது விருந்தினர்களின் மகிழ்ச்சிக்காகவும் அழகிய தோட்டங்களை பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன. தோட்டங்கள் நிலப்பரப்பு வடிவமைக்கப்பட்டு உயர் தரத்தில் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு இந்த துறையில் ஒரு நிபுணரின் தேவை அதிகரித்து வருகிறது என்பதே இதன் பொருளாகும். தோட்டக்கலை மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

வேலைப் பாத்திரங்கள்

தோட்டக்கலை நிபுணருக்கு குறிப்பிட்ட ஆரம்ப அல்லது மேற்பார்வை மட்டங்கள் எதுவும் இல்லை. பயிர்ச்செய்கை, நடுகை, அறுவடை, தாவரங்களுக்குப் பசளையிடல் மற்றும் கத்தரித்தல் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தோட்டங்களை வடிவமைத்தல் ஆகியவற்றை மேற்பார்வை செய்தல் ஒரு தோட்டக்கலை நிபுணரின் பொறுப்புகளில் அடங்கும்.

தொழில் முன்னேற்றம்

ஹோட்டல் துறையில் ஏனைய தொழில்களைப் போன்று, இந்த துறையில் தெளிவான தொழில் முன்னேற்றம் இல்லை. நீங்கள் உதவியாளராகத் தொடங்கி, பின்னர் தலைமை தோட்டக்கலை நிபுணராகலாம்.

அறிவும் திறன்களும்

தோட்டக்கலை நிபுணராவது ஓரளவுக்கு நேரடியானதாகும். உங்கள் சாதாரணதரப் பரீட்சையைப் பூர்த்தி செய்திருப்பதுடன், உங்கள் உயர்தரப் பரீட்சையை விஞ்ஞானத்துறையில் மேற்கொண்டு சித்தியடைந்திருக்க வேண்டும். உங்கள் உயர்தரப் பரீட்சையை நீங்கள் பூர்த்தி செய்யயாவிட்டால் நீங்கள் விஞ்ஞான பாடங்களில் தகுதி பெறும் ஒரு அடிப்படைப் பாடநெறியை அல்லது விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையில் சான்றிதழ் கற்கைநெறியைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தோட்டக்கலை அல்லது விவசாயம் தொடர்பான துறைகளில் டிப்ளோமா அல்லது உயர் தகைமை பெற்றிருப்பது அவசியமாகும். மேலும், தோட்டக்கலை அல்லது விவசாயத்தில் அல்லது சுற்றுச்சூழல், மண், பயிர் விஞ்ஞானங்களில் இளமாணிப் பட்டம் அல்லது உயர் தேசிய டிப்ளோமா, ஆகியவை இந்தத் தொழில் வரிசையில் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஆங்கிலத்தில் பணிபுரியும் அறிவையும் கொண்டிருக்க வேண்டும்.

திறன்கள்

பணியமர்த்தல் செயல்முறை

உங்கள் கல்வித் தகைமைகள் மற்றும் தொழில் அனுபவம் குறித்து மனித வள முகாமையாளர் உங்களிடம் கேள்வி கேட்பார். அனைத்து வேட்பாளர்களும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் மற்றும் இறுக்கமான காலக்கெடுவை சந்திப்பதற்கு அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

சம்பள அளவு

தோட்டக்கலை நிபுணராக பணிபுரியும் ஒருவர் பொதுவாக மாதமொன்றிற்கு ரூபா. 30,000 பெறுவார். சம்பளம் ரூ. 11,700 (மிகக் குறைந்தளவு) முதல் ரூபா. 40,300 (அதிகபட்சம்) வரை காணப்படும். வீட்டுவசதி, போக்குவரத்து மற்றும் பிற சலுகைகள் உள்ளிட்ட சராசரி மாத சம்பளம் இதுவாகும்.