சமையலறைத் திணைக்களம்
சமையலறைத் திணைக்களம் என்பது ஒரு ஹோட்டலின் உணவு மற்றும் பான செயல்பாடுகள் சார் திணைக்களத்தின் துணைப் பிரிவு ஆகும். மேற்பார்வை மற்றும் நிர்வாக பதவிகளில் சில மிகவும் திறமையான நபர்கள் இருப்பதால் இது சிறப்புக் குறிப்புக்குத் தகுதியானது. அவர்களுக்குச் சிறந்த ஊதியம் வழங்கப்படுவதுடன் சிறப்பாகத் தெரிவுசெய்யப்படுபவர்களாவர் ! இது மிகவும் கவர்ச்சிகரமான தொழில் விருப்பமாகத் தோன்றலாம், ஆனால் இந்தத் துறையில் சிறந்து விளங்க பல வருட கடின உழைப்பும் ஆர்வமும் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொதுவாக சமையலறைத் திணைக்களம் என்று அழைக்கப்படுவது உணவு உற்பத்தித் திணைக்களமாகும். இங்கு உணவு தயாரிக்கப்படும் அதேவேளை, உணவு மற்றும் பான சேவைத் துறையினால் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. உணவு உற்பத்தித் துறையானது, பிரதான சமையலறை (சூடு மற்றும் குளிர்), விருந்து சமையலறை, சூப் பிரிவு, பேன்ட்ரிப் பிரிவு, பேஸ்ட்ரி பிரிவு, வெதுப்பகம் மற்றும் இனிப்பு வகைப் பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
1. வேலைப் பாத்திரங்கள்
ஆரம்ப மட்டம்
பயிலுநர் பணியாளர்: ஒரு பயிலுநர் என்பவர் ஒரு உணவகம் மற்றும் மதுசாலையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கவும், உணவுத் தட்டுக்களைச் சுத்தம் செய்வதிலும், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் உதவுவதற்கு இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் ஒருவராவார்.
சமையலறைப் பணியாளர்:ஒரு சமையலறைப் பணியாளர் எல்லா சமையலறை பகுதிகளும் சுத்தமாகவுள்ளன என்றும் பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்து, உணவகத்தை சுத்தம் செய்தல் மற்றும் பொருட்களை மீள்நிரப்பல்செய்யும் பணிகளுக்கு உதவுகின்றார்.
பயிலுநர்: முழுநேர சமையல்காரர்களாக இருக்க பயிற்சி பெறும் அதேவேளை, ஒரு சமையல்காரர் உணவுகளை தயாரிக்கவும் சமைக்கவும் உதவுகின்றார். அவர்கள் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் களஞ்சிய அறையிலுள்ள உணவுப் பொருட்களையும் மேற்பார்வையிடுகிறார்கள், உணவை சுத்தம் செய்து பரிமாறுகிறார்கள்.
உணவு பரிமாறுபவர் I (Commis I ): உணவு பரிமாறுபவர் I (Commis I) உணவைத் தயாரித்தல் மற்றும் செயல்பாட்டுத் தரங்களுக்கு ஏற்ப ஒரு மரியாதையான மற்றும் தொழில்முறை சேவையை உறுதி செய்தல் என்பவற்றை உறுதிப்படுத்துகின்றார். சோஸ் சமையற்கலைஞருக்கு சமைப்பதில் உதவுவதற்கும், அனைத்து நிலையங்களும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் பொறுப்பாகவிருப்பார்.
உணவு பரிமாறுபவர் II (Commis II) நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்யும் வகையில், தினசரி உணவு தயாரித்தல் மற்றும் நியமிக்கப்பட்ட கடமைகளுக்கு பொறுப்பாகவிருப்பார். டெமி செஃப் டி பார்ட்டி அல்லது உணவு பரிமாறுபவர் I (Commis I ) இற்கும் உதவுவார்.
உணவு பரிமாறுபவர் III (Commis III): பரிமாறத் தொடங்க முன்னர், உணவுகளையும் மூலப்பொருட்களையும் தயார்படுத்துதல், எல்லா உணவுகளும் பரிமாறப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு செப் டி பார்டிக்கு உதவுவார். அவர் உணவு பரிமாறுபவர் II (Commis II) மற்றும் உணவு பரிமாறுபவர் I (Commis I) ஆகியோருக்கும் உதவுவார்.
மேற்பார்வை மட்டம்
உதவி தலைமை பணியாளர்: அனைத்து உபகரணங்கள்,பீங்கான்பொருட்கள், வெட்டுப்பொருட்கள் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் ஆகியவற்றின் சரக்கிருப்பினை நிர்வகிக்கின்றார். உணவு மற்றும் பான சேவை அணிக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்காக பணியாளர் குழுவை நிர்வகிக்கிறார்.
டெமி செப் டி பார்டி (Demi Chef de Partie): உணவு தயாரிப்பதற்கும் சமைப்பதற்கும் டெமி செப் டி பார்டி பொறுப்பானவராவார். சமையலறையின் அனைத்து பகுதிகளிலும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு சமைப்பதற்கு உதவுகின்றார். சமையலறை பகுதிகள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்கிறார்.
செப் டி பார்டி (Chef de Partie): அது பேஸ்ட்ரி, கசாப்பு கடை, மீன், சாஸ்கள், காய்கறிகள் மற்றும் பல என சமையலறையின் ஒரு பகுதியை ஒரு செப் டி பார்டி (Chef de Partie) மேற்பார்வையிடுகிறார். இதனால்தான் இந்த வேலையை சில நேரங்களில் நிலைய சமையற்கலைஞர் அல்லது லைன் சமையற்கலைஞர் என்று அழைக்கிறார்கள். பெரிய சமையலறைகளில், செப் டி பார்டிக்கு (Chef de Partie) பொதுவாக டெமி செப் டி பார்டி, உணவு பரிமாறுபவர் அல்லது பயிலுநர் சமையற்கலைஞர் உதவுகிறார்கள்.
நிறைவேற்று மட்டம்
தலைமைப் பணியாளர்: பேன்ட்ரி மற்றும் களஞ்சிய அறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், சமையல் செய்யாத சமையலறை தொழிலாளர்களை மேற்பார்வை செய்தல், பொருட்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவுசெய்தல் ஆகியவற்றை மேற்கொள்கின்றார். சமையலறைகள், பணி அறைகள், களஞ்சிய அறைகள் மற்றும் தூய்மைப்படுத்தல் உபகரணங்களையும் ஆய்வு செய்கிறார்.
கனிஷ்ட சோஸ் சமையற்கலைஞர்: ஒரு கனிஷ்ட சோஸ் சமையற்கலைஞர;, ஒரு சோஸ் சமையற்கலைஞருக்கு உதவியாளராக செயல்படுகிறார், அதாவது சரக்கிருப்பு, சமையலறை ஊழியர் முகாமைத்துவம் மற்றும் உணவு தயாரித்தல் போன்ற ஒரே மாதிரியான கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு அவர்கள் பொறுப்பாக இருப்பார்கள்.
நிறைவேற்று தர சோஸ் சமையற்கலைஞர்: இந்த நபர் நிறைவேற்று சமையற்கலைஞரின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு உதவுவார். விருந்தினர் திருப்தியை உறுதிசெய்வதும், ஒழுங்கமைப்பதும், கட்டளையிடுவதும், சமையலறை செயல்பாடு மற்றும் நிர்வாகப் பணிகளைக் கட்டுப்படுத்துவதும் அவரின் பொறுப்பாகும்.
பேஸ்ட்ரி சோஸ் சமையற்கலைஞர்: பேஸ்ட்ரிகள் மற்றும் ஈற்றுண்டிகளுக்குப் பொறுப்பான சமையலறை குழுவுக்கு வழிகாட்டியாக செயல்பட வேண்டும். பரந்த சமையலறையின் நிர்வாகத்துடன் சோஸ் சமையற்கலைஞருக்கு உதவுவார். வாரத்தைத் திட்டமிடுதல், ரோட்டாக்களைக் கையாளுதல் மற்றும் அணிக்கு கடமைகளை வழங்குதல் ஆகியன இவரது பணியாகும்.
நிறைவேற்றுதர சமையற்கலைஞர்: ஒரு நிறைவேற்றுதர சமையற்கலைஞர் உணவகம் மற்றும் ஹோட்டல் சமையலறைகளின் அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறார். சமையலறை ஊழியர்களை பணியமர்த்தல், பயிற்சி மற்றும் மேற்பார்வை செய்தல் ஆகியவை இதில் அடங்கும். சமையற்கலைஞர் முகாமையாளர் அல்லது தலைமை சமையற்கலைஞர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
2. தொழில் முன்னேற்றம்
ஹோட்டல் துறையிலுள்ள சில திணைக்களங்களைப் போலல்லாமல், சமையலறை திணைக்களத்தில் முன்னேறுவதற்கு எளிதான பாதை இல்லை. ஆரம்ப மட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண தரத் தகைமையுடன் தொடங்கினால், மேற்பார்வை அல்லது நிறைவேற்று நிலை பதவிகளுக்கு முன்னேற நீங்கள் இன்னும் பல திறன்களைப் பெற வேண்டும். தேவையான அனைத்து திறன்களும் சுயமாக கற்பிக்கப்பட முடியாது. நிறைவேற்று சமையற்கலைஞர் சமையற்கலை பாடசாலைகளில் படித்து பயிற்சி பெற்றிருப்பதை நீங்கள் அடிக்கடி காண்பீர்கள்.
2.1 பதவியுயர்வுகள்
இந்த திணைக்களத்திற்குள்ளான பதவி உயர்வுகள் நேரியலானதாகும். நீங்கள் ஒரு பயிலுநர் உணவு பரிமாறுபவராகவிருந்து உதவி தலைமை உணவு பரிமாறுபவராக முன்னேறலாம், ஆனால் ஒரு சோஸ் சமையற்கலைஞர் அல்ல. ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு திறன்கள் தேவை என்பதே இதற்குக் காரணம். முன்னர் குறிப்பிட்டபடி, ஒரு சமையல்கலைஞராக மாறுவதற்கு உங்களுக்கு நிபுணத்துவம், கூடுதல் அறிவு மற்றும் நிறைய அனுபவம் தேவைப்படும். இந்த துறையில் நுழைந்ததும், நீங்கள் சமையல்கலைஞர் அல்லது ஸ்டீவர்ட் நிலைக்கு முன்னேற விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். முடிவெடுத்தவுடன், நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும்.
உங்களிடம் சில அனுபவமும் நிபுணத்துவமும் இருக்கும்போது, நீங்கள் மதிப்புமிக்க சமையற்கலைஞர் குழாத்தினது உறுப்பினராகலாம். உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் சமையல் போட்டிகளில் சமையற்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
3. அறிவும் திறன்களும்
3.1 அறிவு
உங்கள் குறிக்கோள் ஒரு சமையற்கலைஞராக வேண்டும் என்றால், நீங்கள் இன்னும் உங்கள் உயர் கல்வியைத் தொடர்கிறீர்கள் என்றால், ஒரு உணவு பரிமாறுபவர் நிலையில் ஒரு உணவகம் அல்லது ஹோட்டலில் வேலை செய்வதற்குக் கருத்திற்கொள்ளவும். இந்தத் துறையில் நுழைவதற்கான முதல் படி ஒரு சிறந்த கல்வி மட்டுமல்ல, அனுபவமும் கூட. பல ஹோட்டல்கள் உங்களை ஒரு பயிலுநராக நியமிக்க வாய்ப்புள்ளது.
ஆரம்ப மட்டம்
- நீங்கள் இன்னும் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்யாது மற்றும் உங்கள் சாதாரண தரப் பரீட்சையை முடிக்காதிருந்தால், அதைமுடித்த பின்பு, மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவின் (TVEC) கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில் பயிற்சி நிலையமொன்றினால் வழங்கப்படும் சமையற் சான்றிதழொன்றை பாடநெறியொன்றைத் தொடருவதன் மூலம் பெறலாம்.
மேற்பார்வை மட்டம்
- மேற்பார்வை மட்டத்தை அடைவதற்கு நீங்கள் ஹோட்டல் செயல்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் அல்லது சமையல் பாடசாலையில் அடிப்படை சான்றிதழ் அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். இருப்பினும், இது மட்டும் போதாது, ஏனெனில் நீங்கள் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய குறைந்தது 1 அல்லது 2 வருட அனுபவத்தை நிரூபிக்க வேண்டும்.
- நீங்கள் ஒரு சமையற்கலைஞராக மாற விரும்பினால், நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஹோட்டல் நடவடிக்கைகளில் ஒரு அடிப்படை டிப்ளோமா போதுமானதாக இருக்காது, மேலும் நீங்கள் சமையல் கலை போன்ற ஒரு பகுதியில் நிபுணத்துவம் பெற வேண்டும்.
நிறைவேற்று மட்டம்
- உணவகங்களில் நிறைவேற்று சமையற்கலைஞராக விரும்புவோர் சமையல் கலைகளில் இளங்கலை பட்டம் பெறலாம். இந்தப் பாடநெறிகள் உங்களுக்கு எப்படி சமைக்க வேண்டும் என்பதைக் கற்பிப்பது மட்டுமல்லாமல், உணவு சேவை நிறுவனங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் கற்பிக்கின்றன, ஏனெனில் அவை நிதி மற்றும் சரக்கிருப்பு முகாமைத்துவம் மற்றும் கொள்வனவு போன்ற வணிக கூறுகளை ஆராய்கின்றன. நீங்கள் சமையற்கலையில் பட்டம் பெற விரும்பினால், சமையலறைகளில் தொழில்முறை சமையற்கலைஞர்களால் மேற்பார்வையிடப்படும் பயிற்சியைத் தொடரும் வாய்ப்பைப் பெறுவீர்கள், இது உங்களுக்கு தேவையான அனுபவத்தை வழங்கும்.
3.2 திறன்கள்
- கற்றுக்கொள்வதற்கான விருப்பம்
- சமையல் நிபுணத்துவம்
- விவரங்களில் கவனம்
- சிறந்த வாடிக்கையாளர் சேவை
- நிர்வாகம், வரவு செலவுத் திட்டங்கள், செலவுகள் உள்ளிட்ட வணிக உணர்வுகள்
- பூரணமான தூய்மை
- படைப்பாற்றல்
- அழுத்தத்தின் கீழ் வேலை செய்தல்
- சுய சிந்தனை
- சுயமாக ஆரம்பித்தல்
- முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுதல்
- தலைமைத்துவம்
4. பணியமர்த்தல் செயல்முறை
ஹோட்டல் துறையிலுள்ள பிற திணைக்களங்களைப் போலவே, உங்கள் விண்ணப்பமும், சமையலறை திணைக்களங்களைவேலைக்கு விண்ணப்பிக்கும்போது உங்கள் கடந்தகாலப் பதிவுகள் மற்றும் பரிந்துரைகள் பயனுள்ளதாக இருக்கும். மனிதவள முகாமையாளர்கள் நீங்கள் முன்பு வகித்த ஒவ்வொரு பதவியையும் ஆராய்வார்கள், நீங்கள் பாடசாலையைவிட்டு விலகியவராக இருந்தால், எந்தவொரு பணிகளையும் ஒதுக்குவதற்கு முன்பு சில மாதங்களுக்கு நீங்கள் தகுதிகாண் நிலையில் வைக்கப்படுவீர்கள். இந்தத் துறையினுள் நீங்கள் நுழைவதற்கு முன்னர், இந்தத் திணைக்களங்களினுள் ஏற்கனவே ஹோட்டல்களில் அல்லது விருந்தோம்பல் துறையில் உள்ள பிற நிறுவனங்களில் பணிபுரியும் மற்றவர்களிடமும் நீங்கள் கலந்துரையாடுவது புத்திசாலித்தனமானதாகும். ஆரம்பத்தில் ஊதியமோ அல்லது வேலையோ கவர்ச்சிகரமாக இருக்காது. எனவே நீங்கள் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வது நல்லது.
5. சம்பள அளவு
ஒரு பயிலுநர் அல்லது பணியாளரின் ஆரம்ப சம்பளம் பொதுவாக ரூபா .15,000 முதல் ரூபா .25,000 வரை இருக்கும். சாதகமான பக்கத்தில், நீங்கள் ஒரு வேலை அமர்வுப் பட்டியலின் படி பணியாற்றுகின்றீர்கள், அதாவது உங்களுக்கு நாள் விடுமுறை கிடைக்கும். உங்கள் சம்பளத்தை அதிகரிக்கும் சேவைக் கட்டணத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
நீங்கள் ஒரு மேற்பார்வை மட்டத்தை அடைந்ததும், உங்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகளின் பட்டியலுடன் உங்கள் ஊதியமும் அதிகரிக்கும். ஆரம்ப மட்ட பணியாளர்களை விட சேவை கட்டணத்தில் அதிக சதவீதத்தை நீங்கள் பெறலாம். நீங்கள் ரூபா .30,000 முதல் குறைந்தபட்சம் ரூபா .45,000 வரையிலும் சம்பாதிக்க வாய்ப்புள்ளது.
நிறைவேற்று மட்டத்தில், உங்கள் சம்பளம் இரு மடங்கிற்கும் அதிகமாக இருக்கும். அது அனுபவத்தின் காரணமாக மட்டுமல்ல, நிபுணத்துவத்தின் காரணமாகவும் கிடைக்கின்றது. உங்களையொரு சமையற்கலைஞராக அட்டவணையில் கொண்டு வருவது மற்றும் நிறுவனத்தின் இலாபத்திற்கு நீங்கள் எவ்வாறு உதவப் போகிறீர்கள் என்பன உங்கள் சம்பளத்தில் செல்வாக்குச் செலுத்தும். நீங்கள் நிர்வாக மட்டத்தை அடையும் நேரத்தில், நீங்கள் பல வருட அனுபவத்தைப் பெற்றிருக்கலாம், நீங்கள் வெளிநாடுகளில் கூட வேலை செய்திருக்கலாம்.
Women in Tourism
Let her learn, let her explore, let her see the world
Sri Lanka's tourism industry offers a number of career opportunities for women. Here's a glimpse into some of them.
Watch Video