வெளிப்புற மற்றும் சாகச வழிகாட்டிகள்

இலங்கை, சுற்றிலும் நீர் இருப்புக்கள் நிறைந்த மற்றும் மலைகள் தொகுக்கப்பட்ட தீவு, சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பல சாகச மற்றும் தீவிர விளையாட்டுகளில்; பங்கேற்கக்கூடிய இடமாகும். நீர் மூழ்குதல் தொடக்கம் நீர் உலாவல், நீச்சல் காற்று வழங்கல், வெள்ளை நீர் மிதவை, படகோட்டம், மலையேற்றம், நடைபயணம் வரை வெளிப்புற நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

நீங்கள் ஒரு சாகசக்காரர் அல்லது தீவிர விளையாட்டுக்களின் சிலிர்ப்பை விரும்புவராக அல்லது நேசிப்பவராக இருப்பின், சுற்றுலாத் துறையின் இந்த துறையில் ஒரு வேலை நிச்சயமாக உங்களுக்கு நன்றாக பொருந்தும். தற்போது உள்ள சில வேலைகள் மற்றும் வரவிருக்கும் வாய்ப்புகளைப் பார்ப்போம்.

இந்த தொழிலிலுள்ள வேலைகள் ஒவ்வொரு இலக்குக்கும் அவை ஊக்குவிக்கும் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்டவை. உதாரணமாக, அறுகம் குடாவை தளமாகக் கொண்ட ஒரு உலாவல் நிறுவனம், போட்டிகளில் பங்கேற்ற மற்றும் அலைகளை எப்படி சவாரி செய்ய வேண்டும் என்பதை அறிந்த, நீர் உலாவல் சான்றிதழ் பெற்ற பயிற்றுவிப்பாளர்களைக் கொள்ள விரும்பும். ஆனால் ஒரு நடைபயண வழிகாட்டி சிறந்த பொருத்தமாக அமையாது.

வேலை நிலைமைகள்

நீர் உலாவல்

நீர் உலாவல் பயிற்றுவிப்பாளர்: உலாவல் முறையை கற்பிக்க, ஒருவர் போதுமான உலாவல் அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். வேலைவழங்குனர்கள், நீங்கள் சர்வதேச அல்லது உள்ளுர் நிகழ்வுகளில் பங்கேற்றியுள்ளீர்களா, உங்களுக்கு கற்பித்தலில் முன் அனுபவம் உள்ளதா மற்றும் நீங்கள் எவ்வளவு காலம் நீர் உலாவல் செய்துள்ளீர்கள் என்பதை பார்ப்பார்கள். உபகரணங்களை எவ்வாறு பராமரிப்பது என்பதும் பாடசாலை அல்லது கடைகளில் விற்பனைக்கு உதவுவதையும் நீங்கள் அறிந்திருத்தல் வேண்டும்.

நீர் மூழ்குதல்

நீர் மூழ்குதல் பயிற்றுவிப்பாளர்: ஸ்கூபா மூழ்குபவருக்கு PADI சான்றிதழ் முக்கியம் – உள்ளூர் பாடசாலைகளால் வழங்கப்படும் மூழ்கலில் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட பாடநெறி. உங்களுக்கு நீச்சல் திறன் மற்றும் உடல் ஆரோக்கியமும் இருக்க வேண்டியது குறிப்பிடத்தக்கது. நீங்கள் கற்பிப்பதற்கான சான்றிதழ் பெறுவதற்கு முன்னர் பல படிகள் உள்ளன. அதனை அறிந்து கொள்ள அருகிலுள்ள PADI பாடநெறி மையத்திற்கு செல்வதே சிறந்தது.

நடைபயணம் மற்றும் மலையேறல்

நடைபயணம் மற்றும் மலையேறலுக்கு அதிகமானோர் விருப்பப்படுவது, மற்றைய தீவிர விளையாட்டுகளுக்கு போலன்று இதற்கு சிறப்பு திறன்கள் தேவைப்படுவதில்லை. மாறாக சகிப்புத்தன்மையே தேவைப்படுகிறது. இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் நடவடிக்கைகளில் இதுவம் ஒன்றாகும். இந்த துறையில் மலையேறல் வழிகாட்டிகள் வேலையும் அடங்கும். நிலப்பரப்பு மற்றும் பாதைகளை நன்கு அறிந்திருப்பமை மேலும் அடிப்படை முதலுதவி திறன்களையும் கொண்டிருத்தல் முக்கியமாக எதிர்பார்க்கபடுபவை.

திமிங்கிலம் பார்வையிடல்

இலங்கையில் பல மென்மையான ராட்சதர்கள் நம் கடலில் வசிக்கின்றனர். இத்துறை வேலையில் ஒரு கப்பலை கடலுக்கு செலுத்துதல் அல்லது குறிப்பிட்ட பாலூட்டிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் பற்றிய அறிவைப் பகிர்வது ஆகியவை அடங்கும். நீங்கள் இந்த துறையில் பணியாற்ற விரும்பினால், இருக்கும் வாய்ப்புக்கள் மற்றும் தேவைப்படும் தகுதிகள் பற்றி மேலும் அறிய திமிங்கிலத்தைப் பார்வையிடும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு நிறுவனத்துடன் பேசுவது உதவியாக அமையும்.

பிற துறைகள்:

  1. வெள்ளை நீர் மிதவை
  2. வெங்காற்று மிதவை
  3. ஆழ்கடல் மீன்பிடித்தல்
  4. படகோட்டம்
  5. கேனோ பயணம்
  6. கடலில் மிதக்கும் மரப்பலகை மீதான அலை விளையாட்டு

அறிவு மற்றும் திறன்கள்

உங்களுக்கு தேவையான அறிவு மற்றும் தகுதிகள் ஒரு வேலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும். ஒன்றிற்கு நீங்கள் ஒரு திறமையான உலாவராக இருப்பதை கோருகையில், மற்றொன்றிற்கு நீங்கள் சான்றழிக்கப்பட்ட மூழ்காளராக இருப்பதை கோருகிறது. திறன்கள் தொகுப்பிற்கும் இதுவே. நீங்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஏனெனில் இந்த ஒவ்வொரு துறையிலும் பொதுவாக நீங்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளுர் பயணிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்பதால். ஒவ்வொரு வேலை அல்லது தொழிலிருந்து தேவையான திறன்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுபடும்.

திறன்கள்

பணியமர்த்தல் நடைமுறைகள்

பணியமர்த்தல் செயல்முறை வேலை வழங்குபவரிடமிருந்து இன்னொரு வேலை வழங்குபவருக்கும், செயல்பாட்டிலிருந்து செயல்பாட்டுக்கும் மாறுபடும். பொதுவான நடைமுறையாக ஒரு மனிதவள பிரதிநிதியுடன் அல்லது வணிக உரிமையாளருடன் நேருக்கு நேரான ஒரு நேர்காணல் நடத்தப்படும். உங்கள் திறமை, அனுபவம் மற்றும் செயல்பாடு அல்லது விளையாட்டி மீதான ஆர்வம் ஆகியவற்றை குறித்து அவர்கள் உங்களை மதிப்பிடுவார்கள்;.

சம்பள அளவு

விருந்தோம்பல் மற்றம் சுற்றுலா துறையிலுள்ள மற்றைய முறைசாரா வேலைகளைப் போலவே, வெளிப்புற, தீவிர அல்லது சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கான சம்பள அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மற்றும் திறனிலிருந்து திறனுக்கு மாறுபடும். நீங்கள் ரூபா 40,000 முதல் ரூபா 100,000 க்கும் மேல் சம்பாதிக்கலாம்.