காட்டிலாகா அதிகாரி (ரேஞ்சர்)

தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஒரு கருத்தான காட்டிலாகா அதிகாரி (ரேஞ்சர்), விருந்தினர்களை இயற்கையுடனும் வனப்பகுதியுடனும் கதை சார்ந்த விளக்கத்தின் மூலம் இணைப்பதாகும். காட்டிலாகா அதிகாரியின் (ரேஞ்சர்) தகவல் தொகுப்பு விருந்தினர்களுக்கு கட்டாயமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் அமைவதே இதன் அடிப்படையாகும். காட்டிலாகா அதிகாரி (ரேஞ்சர்) ஒரு விலங்கை சுட்டிக்காட்டுவதைத் தாண்டி, உயிரினங்களின் வாழ்விடங்கள், பிரதேசங்கள் மற்றும் மற்றைய விலங்கினங்களை விளக்கி, பூங்காவிற்கான பயணத்தை சுவாரஸ்யமானதாகவும் தகவல் மிகுந்ததாகவும் மாற்றுவார். காட்டிலாகா அதிகாரிகள் (ரேஞ்சர்) 4×4 சாகசங்களுக்கு பயணிகளை அழைத்து செல்ல முடியும், விருந்தினர்களின் பாதுகாப்பையும் வனப்பகுதியின் எந்தவொரு சம்பவத்திற்கும் தாயாராக இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.

வேலை நிலைகள்

சாப்பாட்டு விடுதி மற்றும் சுற்றுலாத் துறையில் வேலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன, ஆனால் காட்டிலாகா அதிகாரி (ரேஞ்சர்) போன்ற முக்கிய பிரிவுகளை எடுக்கும் போது கட்டமைப்பு குறைவாகவே உள்ளது. அவர்களின் வேலை நிலைகள் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுடன் இணையக்கூடும்.

ஜூனியர் ரேஞ்சர் – பொதுவாக இளைய மட்டத்திலுள்ள ஒரு காட்டிலாகா அதிகாரிக்கு பறவைகள், நிலநீர் வாழ்வன மற்றும் பாலூட்டிகள் பற்றிய அடிப்படை அறிவு இருக்கும். அவர்களுக்கு அடிப்படை வன நடத்தை பண்புகளை விவரிக்க கூடியதாக இருப்பதுடன், மூத்த சக ஊழியருடன் சேர்ந்து குழுக்களை வழிநடத்த முடியும்.

ரேஞ்சர் – இந்த மட்டத்தில், காட்டிலாகா அதிகாரி விருந்தினர்களுக்கு ஒரு பறவையின் இடம்பெயர்வு முறைகள், சிறுத்தைகளின் சிறப்பு அடர்த்தி பற்றிய விபரம், பூங்காவை உருவாக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய கூடுதலான தகவல்களை விளக்ககூடியதாக அமையும். மேலும் விலங்குகளின் நடத்தை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கவும், சஃபாரிகளில் விருந்தினர்கள் சந்திக்கும் விலங்கினங்கள் பற்றிய குறிப்பிட்ட கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

சீனியர் ரேஞ்சர் – மூத்த காட்டிலாகா அதிகாரி அதிகமாக நிர்வாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவார். சரியான காட்டிலாகா அதிகாரியை குறிப்பிட்ட விருந்தினருக்கு ஒதுக்குவது, முக்கியமான உதவி கோரும் விருந்தினர்களை நிர்வகிப்பது, சிக்கல்களைத் தீர்ப்பது, அத்துடன் காட்டிலாகா அதிகாரி குழுக்களுக்கு மேம்பாட்டு இலக்குகளை உருவாக்குவது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவர்.

தொழில் முன்னேற்றம்

இந்தத் தொழில் இலங்கையில் தற்போது வளர்ச்சி நிலையிலுள்ளதால், முன்னேற்றத்திற்கான சரியான காலக்கெடுவை வழங்குவது கடினமாகும். ஒரு பயிற்சி காட்டிலாகா அதிகாரி உயர் மட்டத்திற்கு முன்னேற 12 முதல் 18 மாதங்கள் வரையான காலப்பகுதியை எடுத்துகொள்ளலாம். இந்த வேலை, உயர் நிலையின் அடிப்படையில் இல்லாமல் உணர்ச்சியாலும் ஆர்வத்தினாலும் உந்தப்படும் வேலை என்பதால், பொதுவாக ஒரு மட்டத்திலிருந்து இன்னொரு நிலைக்குச் செல்வதற்கான அவசரம் காணப்படாது. மேலும் இத்தொழில் முன்னேற்றம் ஒரு நேர்கோட்டில் இருப்பதல்ல, ஒரு அனுபவமிக்க காட்டிலாகா அதிகாரி சிறியவொரு அணியை நிர்வகிக்கலாம் அல்லது ஒரு பயிற்சி நிலையை மேற்கொள்ளலாம்.

அறிவு மற்றும் திறன்கள்

இயற்கை அறிவியலில் இளங்கலைப் பட்டம் உங்களுக்கு ஜூனியர் ரேஞ்சர் பதவிக்கு ஓர் நேர்காணலை தக்கவைக்கும். கல்விப் பின்னணி இல்லாத ஆனால் கணிசமான அனுபவமும், துறையில் ஆர்வமும் கொண்ட சுற்றுலாத் துறையைச் சேர்ந்த நபர்கள், காட்டிலாகா அதிகாரி பணியில் இறங்கிய சம்பவங்களும் உள்ளன. இருப்பினும், இயற்கை அறிவியல் பாதுகாப்பில் இளங்கலை பட்டம் மற்றும் என்.வி.கே சான்றிதழ் இந்தத் தொழிலுக்குள் நுழைய பயனுள்ளதாக அமையூம்.

திறன்கள்

பணியமர்த்தல் செயல்முறை

காட்டிலாகா அதிகாரி பயிற்சி திட்டத்தில் நீங்கள் ஒரு பகுதியாக இருந்தால், உங்கள் செயல்திறன் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில், திட்டத்தின் முடிவில் ஒரு சஃபாரி கூட்டமைப்பு மூலம் உங்களுக்கு வேலை வழங்கப்படும் வாய்ப்பு காணப்படும். காட்டிலாகா அதிகாரிகளைப் பயன்படுத்தும் உடைமைகளுக்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது உங்களுடைய சொந்த வணிகத்தை அமைக்க இன்னொருவருடன் கூட்டாளராகவும் சேரலாம். உங்கள் அறிவின் நிலை, அந்த அறிவை ஒரு சுவாரஸ்யமான மற்றும் உற்சாகமான முறையில் பகிர்ந்து கொள்ளும் திறன், உயர் அழுத்த சூழ்நிலைகளைக் கையாளும் திறன் மற்றும் விருந்தினருடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்வது ஆகியவையின் மூலம் உங்கள் செயல்திறன் தீர்மானிக்கப்படும்.

சம்பளம்

பண்புகளின் அடிப்படையில் சம்பள அளவு முழுவதும் மாறுபடக்கூடும். ஒரு காட்டிலாகா அதிகாரிக்கான மாதாந்த சம்பளம் ரூபா 30,000 முதல் 100,000 வரை உண்டு.